ஸ்ரீரெஜித் குமார் மற்றும் LMRK அமைப்பு
Share

Rejith Kumar

ஸ்ரீ ரெஜித் குமார்

இந்தியாவின் கேரளாவில் உள்ள திரிசூரை சார்ந்த ஸ்ரீ ரெஜித் குமார் தனது வாழ்க்கையில் மிகவும் சோதனைக்குரிய அனுபவங்களே பதில்களுக்கான உள் தேடலாக தேர்ந்து எடுத்தார். 1991-ம் ஆண்டில், 18 வயதில் தனது தந்தையை இழந்தார். கடவுளை நோக்கி அவர் உணர்ந்த தீவிர கோபம் அவரை நாத்திகராக மாற்றியது. 1995-ம் ஆண்டில் அவர் தனது தம்பியை இழந்தபோது, அது அவருக்குள் ஒரு பெரும் உணர்ச்சி எழுச்சியை உருவாக்கியது. இந்த நேரத்தில் அவர் பதில்களைக் கண்டுபிடிப்பதில் உறுதியாக இருந்தார். அவரது பிரார்த்தனைகள் அவரது தம்பியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று ஒரு ஜோதிடர் அவரிடம் சொன்னபோது, அது அவருக்குள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவரை தெய்வீகத்தை நோக்கித் திருப்பியது. இப்பொழுது அவரது வாழ்க்கையின் நிகழ்வுகளை வழிநடத்தும் ஒரு சக்தி இருப்பதை உணர்ந்து, மேலும் விவரிக்க முடியாத விஷயங்களை புரிந்துகொள்ளக் கடவுள் மட்டும் தான் உதவ முடியும் என்பதனை உணர்ந்தார்.

28-வது வயதில் ஸ்ரீ ரெஜித் குமாரின் கனவில் முருகப்பெருமான் ஒரு ஒளி வடிவத்தில் காட்சி அளித்து, அவரது 30-வது வயதில் தனது நேரடிப் பாதுகாப்பின் கீழ் வருவார் என்பதை வெளிப்படுத்தினார். முன்கூறியபடி, அவரது 30-வது வயதில் ஸ்ரீ ரெஜித் குமார் வாழ்க்கையை மாற்றும் அனுபவம் ஒன்று நிகழ்ந்தது. ஒரு இரவு உறங்க செல்ல ஆயுத்தமானபோது உடல் செயலற்றது போல் உணர்ந்தார். தன்னை சுற்றி இருப்பதை உணர்ந்தாலும் தன்னால் இயங்க முடியாத நிலையில் இருந்தார். அவர் திடீரென்று ஒரு அழகான குழந்தை தனது படுக்கைக்கு அருகில் நின்று அவரைப் பார்த்து கருணையுடன் சிரிப்பதைக் உணர்ந்தார். முருகப்பெருமான் தனது பால தண்டாயுதபாணி வடிவில் தோன்றி அஞ்சேல் எனக் கூறி தான் ஆறுமுகன் என்பதை வெளிப்படுத்தி, மூன்று முறை அவரது காதில் அவருக்கு ஒரு மந்திர உபதேசம் செய்தார்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீ ரெஜித் குமார் தியானிக்கும் போது காட்சி வழியாக முருகப்பெருமானிடமிருந்து செய்திகளைப் பெறத் தொடங்கினார். அவரது குறிப்பிடத்தக்க தரிசனங்களில் ஒன்று, 2005-ம் ஆண்டில் தனது 32-வது வயதில் முருகப்பெருமான், போகர் சமாதி மற்றும் முருகப்பெருமானின் இரண்டாவது நவபாஷாண மூர்த்தி இருக்கும் இடத்தைக் காட்டியதாகும்.

முருகப்பெருமான், இவர் தம் கடமைகளை சிறப்பாக செய்வதற்காக இவரை பல இடங்களுக்கு செல்லுமாறு கட்டளையிட்டு விசேஷ சக்திகளான பஞ்சபூத சக்திகள், ஸ்வஸ்திக் சக்தி, மதர் தாவோ சக்தி, சப்தரிஷி மண்டல சக்தி, கார்த்திகை நட்சத்திரங்கள் அல்லது பிளிடியன் சக்திகளையும் பெற்று பயனுறச் செய்தார்.

2013 ஜனவரி மாதத்தில், ஒரு புனித சஷ்டி திதியில், ஸ்ரீ ரெஜித் குமார் தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது உள் உணர்த்தலின் மூலம் "முருகப்பெருமான் ராஜ கோலஅலங்காரத்தில் வருகிறார்" என்ற அசரீரி கேட்க முடிந்தது. ஒரு சக்தி தனது முகட்டை வானத்தை நோக்கித் பார்க்குமாறு செய்ததை உணர்ந்தார். மேலும் ஒளி வடிவில் முருகப்பெருமானின் அற்புத தரிசனத்தைக் கண்டார். ஸ்ரீ ரெஜித் குமார் பெற்ற இந்த தெய்விக காட்சியானது மனித வரலாற்றில் மிக முக்கியமான ஆற்றல் மாற்றத்தை முன்னறிவித்தது, அடுத்த 2,000 ஆண்டுகளுக்கு உலக விவகாரங்கள் முருகப்பெருமானின் தலைமையில் இருப்பதைக் குறிக்கின்றது. முதல் தமிழ்ச் சங்க காலத்தில் இருந்த கார்த்திகை அல்லது பிளிடியன் ஆற்றல்கள் புதிய முருகயுகத்தில் மீண்டும் வந்ததை அவருக்கு உணர்த்தப்பட்டது. இது பூமித்தாயின் ஆன்மிக மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த குறிப்பிடத்தக்க தெய்வீக அனுபவத்திற்குப் பிறகு, முருகப்பெருமான் ஸ்ரீ ரெஜித் குமாரிடம் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கு ஒளி வடிவமாக தோன்றத் தொடங்கினார். முருகப்பெருமான், அகஸ்தியர், போகர் சித்தர், யாக்குப் சித்தர் மற்றும் மகா அவதார் பாபாஜி ஆகியோரின் தெய்வீக உள் உணர்த்துதலாலும் மற்றும் ஆசிகளாலும், பல ஆற்றல் புள்ளிகளுக்கு பயணித்து, விசேஷ வழிபாடுகள் செய்து முருக யுகத்திற்கு தேவையான குறிப்பிட்ட ஆற்றல்களை வெளியிட்டார். இந்த இடங்களில் சில - மேக் ரிட்சி நீர்த்தேக்கம் (சிங்கப்பூர்), ப்ளு மவுண்டன்ஸ் மற்றும் லயன் ஐலண்ட் (ஆஸ்திரேலியா), சில்பரி ஹில்ஸ் மற்றும் டிராகன் ஹில்ஸ் (U.K), காமரின கிஹித்(மங்கோலியா), சீனா, ரஷ்யா, பூட்டான், பாலி, ஜப்பான், தாய்லாந்து, கதிர்காமம் (இலங்கை), ஐவர்மலை, ஆஞ்சநேயர்மலை, கன்னிவாடி மலை, பூம்பாறை மற்றும் உஜ்ஜைன்(இந்தியா).

அவரது தெய்வீக பணிகளை செய்வதற்கு பல்வேறு இடங்களுக்கு பயணிப்பதைத் தவிர, முருகப்பெருமானின் கட்டளைக்கு இணங்க அவரது வழிகாட்டலின்படி ஒரு சேவையாக மனிதகுலத்தின் நலனுக்காக மற்ற கடமைகளை நிறைவேற்றிவருகிறார் . இவைகளாவது:

ஸ்ரீ ரெஜித் குமாருக்கு தனது ஆன்மீக பயணத்தை பகிர்ந்து கொள்ள 2015-ம் ஆண்டில் தான் முருகப்பெருமான் அனுமதி அளித்தார். முதன்முதலில் வேந்தர் சேனலின் ‘மூன்றாவது கண்’ நிகழ்ச்சியின் மூலம் அவரைப் பற்றி உலகம் அறிந்தது. இதன் பிறகு வெளிநாட்டில் மற்றும் இந்தியாவிலும் பல்வேறு ஊடக சேனல்களில் நேர்காணல்கள் வழங்கியுள்ளார். இவைகளாவது: ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (ATBC) ரேடியோ சேனல், தாயகம் ரேடியோ சேனல் மற்றும் இந்தியாவில் உள்ள தத்வமயி மற்றும் சித்தர் பூமி டிஜிட்டல் மீடியா சேனல்ஸ் போன்றவை ஆகும்.

லயன் மயூரா ராயல் கிங்டம்

2017-ம் ஆண்டு முருகப்பெருமான் ஸ்ரீரெஜித் குமார் அவர்களை ‘லயன் மயூரா ராயல் கிங்டம்’ (LMRK) என்ற அமைப்பினை தொடங்க கட்டளையிட்டார். இவ்வமைப்பானது முருகப்பெருமான் கொடுத்த தெய்வீக கடமைகளை நிறைவேற்றுவதற்கான உலகளாவிய தளமாக செயல்படும். இப்பணிகள் செய்வதனால் முருகயுகத்திற்கான தேவையான ஆற்றல்களை அளித்து குமரிகண்ட காலத்தில் இருந்தது போல் பூமிக்கும செவ்வாய் கிரகத்திற்கும் மறுஇணைப்பினை உறுதிசெய்யும். அமைப்பின் பெயரானது ஸ்ரீ ரெஜித் குமாருக்கு முருகப்பெருமானாலேயே வழங்கப்பட்டது. ‘லயன்’ என்பது ‘ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்மற்றும் ‘செவ்வாய் கிரகத்தையும்’ குறிப்பிடுகிறது. ‘மயூரா’ என்பது ‘முருக பெருமானையும் குமரிக் கண்டத்தையும்’ குறிப்பிடுகிறது.

LMRK மற்ற ஆன்மீக அமைப்புகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

இந்த அமைப்பு தனித்துவமானது. இங்கு பணியானது முருகப்பெருமான் மூலம் ஸ்ரீ ரெஜித் குமாருக்கு வழங்கப்பட்ட தெய்வீக வழிகாட்டுதலின்படி மட்டுமே இயங்குகிறது. LMRK உறுப்பினர்கள் வெவ்வேறு நாடுகளில் உலகளாவிய ரீதியில் அமைந்துள்ளவராக இருந்தாலும், முருகப்பெருமான் ஸ்ரீ ரெஜித் குமாருக்கு நியமிக்கப்பட்ட தெய்வீக கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒரே அணியாக செயல்படுகிறார்கள். முருகப்பெருமான் அறிவுறுத்தலின்படி ஸ்ரீ ரெஜித் குமார் LMRK அமைப்பிற்கு கேப்டனாக இருந்து, உறுப்பினர்களிடையே சகோதரத்துவத்தை வளர்த்து அவர்களின் ஆன்மீக மற்றும் பொருள் முன்னேற்றத்தில் வழிகாட்டுகிறார். மேலும் முருகப்பெருமான் ஸ்ரீ ரெஜித் குமாரிடம் அமைப்பிற்காக எந்த விளம்பரமும் மற்றும் மேம்படுத்தும் செயலோ கூடாது என்றும் உணர்த்தியுள்ளார். கார்த்திகா அல்லது பிளிடியன் ஆற்றல் உள்ளவர்கள், தாமாகவே இவ்வமைப்பில் இணைவார்கள். ஏனெனில் அவர்கள், பழங்கால குமரிகண்ட ஆத்மாவாக இருந்து தெய்வீக கடமைகளை இப்பிறவியில் செய்வதற்காக பிறந்தவர்கள் என்பதனை வெளிப்படுத்தினார். 15 நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த புனிதக் காரணத்திற்காக ஒன்றாக இணைந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

LMRK எப்போது உருவாகியது?

LMRK என்ற உலகளாவிய அமைப்பானது திரிசூரை பதிவு செய்த தலைமையகமாகக் கொண்டு, சஷ்டி புனித திதியில் 01-05-17-ல் நிறுவப்பட்டது. பழனி கோவில் வளாகத்தில் வள்ளிச் சுனையில் சிறப்பு பூஜை நடத்தி, முருகப்பெருமானின் ஆசிகளுடன் LMRK அமைப்பு தொடங்கப்பட்டது.

LMRK-வின் முதல் தெய்வீக கடமை -மயூர சிம்மாசன பிரதிஷ்டை

09-05-17 அன்று LMRK-வின் முதற் தெய்வீக கடமையாக முருகப்பெருமானின் திருவடி மற்றும் வேலும் மயூர சிம்மாசனத்தில் வைத்து பிரதிஷ்டை வேல்ஸில் (U.K) (Zero Time Zone )செய்யப்பட்டது, ஏனெனில் முருக யுகத்திற்கு தேவையான ஆற்றல்கள் ஸீரோ தான் தொடங்குகிறது.மேலும் முருகப்பெருமான் இப்பிரதிஷ்டை மூலம் தனது ஆட்சி ஆரம்பமாவதையும், இந்த தெய்வீகக் கடமையின் முடிவில் அவரது தெய்வீக ஆற்றல்கள் உலகெங்கும் பரவும் என்பதையும் ஸ்ரீ ரெஜித் குமாரிடம் வெளிப்படுத்தினார்.

LMRK-வின் இரண்டாவது தெய்வீக கடமை - சுவட்சர்லாந்து பிரதிஷ்டை

LMRK அமைப்பிற்கு முருகப்பெருமானால் அளிக்கப்பட்ட இரண்டாவதும் சமீபத்திய கடமையானது சுவிட்சர்லாந்தில் முருகப்பெருமான் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி மூர்த்திகளின் பிரதிஷ்டையாகும். இது முருகப்பெருமானால் ஸ்ரீ ரெஜித்குமாருக்கு ஷம்பாலா பாயிண்ட், கமிரின் கீத் மடாலயத்தில் (கோபி பாலைவனம், மங்கோலியா) 30-03-19 அன்று சென்றபோது வெளிப்படுத்தப்பட்டது. LMRK உறுப்பினர்கள் ஒரு குடும்பமாக இணைந்து வந்து சமீபத்தில் முருகப்பெருமானின் கட்டளைப்படியும் மற்றும் ஸ்ரீ ரெஜித் குமாரின் வழிகாட்டுதல்படியும், புனித தினமான சிவராத்திரி அன்று 21-02-20 ‘பழனி-சுவிட்சர்லாந்து செல்வத் திருவிழா’ வெற்றிகரமாக நடத்தினர். விசேஷ வழிபாடுகள் முருகப்பெருமானுக்கும் ஆஞ்சநேயசுவாமிக்கும் ஆஞ்சநேயர் மலையிலும், ஐவர் மலையிலும் LMRK உறுப்பினர்களால் பக்தி பரவசத்துடன் நடந்தேறியது. இதனை தொடர்ந்து மாலையில் பழனி மலையை சுற்றி மூர்த்திகளுடன் கிரிவலமானது கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவானது சுவிட்சர்லாந்தில் பிரதிஷ்டைக்கு முன்பு பழனியில் மூர்த்திகளுக்கு செய்த மரியாதை ஆகும்.

12-04-20 அன்று முருகப்பெருமான் வழிகாட்டுதலுடனும், காப்புடனும் "அனிமாமுன்டி கல்சுரல் சென்டர்", வோர்ப், சுவிட்சர்லாந்தில் சரியாக 12.00 AM (ZeroTime) வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த பிரதிஷ்டையானது முருகப்பெருமான்குழந்தைவேலாயுத சுவாமியாக அவதரித்ததை குறிப்பதாக அமைந்தது. முருகப்பெருமான் நவபாஷாண மூர்த்தியாக தேர்ந்தெடுத்து வந்தமை, உலக முழுவதும் ஹீலிங்செய்வதற்கும்மற்றும் உலகபொருளாதார அமைப்பில் நல்ல முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தி செல்வ சுபீட்சத்திற்கு வழி வகுக்கும்என்பதனை முருகப்பெருமான் ஸ்ரீ ரெஜித்குமாருக்குவெளிப்படுத்தினார்பிரதிஷ்டை தினமானது புனித ஈஸ்டர் திருநாளையும் மற்றும் ‘சர்வதேச மனித விண்வெளி நாளினையும்’ குறிக்கின்ற விதமாக அமைந்துள்ளது.இதன் முக்கியத்துவம் எதிர்காலத்தில் தெரிய வரும்.மேலும்முருகப்பெருமான்ஸ்ரீ ரெஜித் குமாருக்கு வெளிப்படுத்தியது என்னவென்றால் இப்பணியினை நடத்த உதவியவர்களுக்கு அபரிமிதமான குமரிகண்ட ஆற்றல்களை பெறுவார்கள்; இதனால்அவர்கள்ஆன்மீகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் பெறுவார்கள்.

ஓம் சரவணபவாய நமஹ